உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசியபோது எடுத்த படம்.

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் - முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேச்சு

Published On 2023-09-19 14:33 IST   |   Update On 2023-09-19 14:33:00 IST
  • பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி திருச்செந்தூர் தொகுதி அளவிலான அ.தி.மு.க. பொதுக்கூட்டம் உடன்குடி பஜார் அண்ணா திடலில் நடைபெற்றது.
  • மின் கட்டணம், வீட்டுவரி, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டு அதிருப்தி அடைந்துள்ளனர் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.

உடன்குடி:

பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் மற்றும் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்கம் குறித்த திருச்செந்தூர் தொகுதி அளவிலான பொதுக்கூட்டம் உடன்குடி பஜார் அண்ணா திடலில் நடைபெற்றது.

ஆழ்வார்திருநகரி ஓன்றிய செயலாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஓன்றிய செய லாளர்கள் ராமச்சந்திரன், ராஜ்நாரா யணன், சவுந்தி ரபாண்டி, காசிராஜன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு உறுப்பி னர்கள் முருகேஸ்வரி ராஜ துரை, மகாராஜா, உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, ஊராட்சி துணைத்தலைவர்கள் ராஜ்குமார், செல்வகுமார், தலைமை நிலைய பேச்சா ளர்கள் பொன் ஸ்ரீராம், இன்பகரன், ஓன்றிய பொருளாளர் சங்கரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் உடன்குடி குணசேகரன் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்

அ.தி.மு.க. கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி போன்ற பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்க வில்லை, தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டு விட்டது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு முறையாக நிறைவேற்றவில்லை.

மின் கட்டணம், வீட்டுவரி, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டு அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோகமாக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து விளையாட்டு அணியினருக்கு உபகரணங்கள், பெண்க ளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைமை நிலைய பேச்சாளர் நாஞ்சில் ஞானதாஸ், ஜெயலலிதா பேரவை ஓன்றிய செயலாளர்கள் விஜயராஜ், சுரேஷ்பாபு, எம்.ஜி.ஆர். இளைஞரணி ஓன்றிய செயலாளர் அமிர்தா மகேந்திரன் மற்றும் திருச்செந்தூர் தொகுதி அ.தி.மு.க. அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். உடன்குடி நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ரெங்கன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News