உள்ளூர் செய்திகள்

அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பம் பதிவு செய்ய இன்று கடைசி நாள்

Published On 2023-05-22 09:45 GMT   |   Update On 2023-05-22 09:45 GMT
  • தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
  • நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பபதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கியது.

சேலம்:

தமிழக உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்கத்தின் கீழ், 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு துறைகளின் கீழ் ஏராளமான இளங்கலை பாடப்பிரிவுகள் பயிற்று விக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரிகளில் நடப்பாண்டு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பபதிவு கடந்த 8-ந் தேதி தொடங்கியது.

சேலம், நாமக்கல்...

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்களுக்கு, கல்லூரிகளில் உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப் பட்டுள்ள பேராசிரியர்கள், கணினி மூலம் மாண வர்களின் விண்ணப்பங் களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

கல்லூரிகளில் திரண்டனர்

இதனிடையே விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 19-ந்தேதியுடன் நிறைவடைந்த நிலையில் மேலும் 3 நாட்கள் கூடுதல் அவகாசம் தமிழ்நாடு அரசு உயர் கல்வித்துறை வழங்கியது. அதாவது இன்று (22-ந்தேதி) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் என்பதால் விண்ணப்பிப்தற்காக மாணவ- மாணவிகள் கல்லூரிகளில் திரண்டனர். அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. 

Tags:    

Similar News