உள்ளூர் செய்திகள்

காேப்புபடம்

கண்காணிப்பு பணியில் ஈடுபட திருப்பூரில் கூடுதலாக நுண்ணறிவு போலீசார் நியமனம்

Published On 2022-06-17 06:58 GMT   |   Update On 2022-06-17 08:04 GMT
  • ஆய்வு கூட்டம் கமிஷனர் தலைமையில் நடப்பதும் வழக்கம்.
  • தலா ஒருவர் வீதம், 8 நிலையங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருப்பூர் :

குற்ற சம்பவம், அதன் பின்னணி, அவற்றின் மீதான போலீசார் நடவடிக்கை என்ன, அரசியல் மற்றும் பிற அமைப்பினரின் நடவடிக்கை, சட்டம் - ஒழுங்கு நிலவரம் குறித்து நுண்ணறிவு பிரிவு (ஐ.எஸ்.,) போலீசார் கண்காணிப்பது வழக்கம். திருப்பூர் மாநகரில் பணியாற்றி வரும் ஐ.எஸ்., போலீசார், இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் மற்ற போலீசாரின் நடவடிக்கை, நிலைய எல்லைக்குள் நடக்கும் லாட்டரி, கஞ்சா, மதுவிற்பனை உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள், சட்டம் - ஒழுங்கு நிலவரம் உள்ளிட்டவை கண்காணித்து முன்கூட்டியே ஐ.எஸ்., போலீஸ் உதவி கமிஷனரிடம் தெரிவித்து பின்னர் கமிஷனருக்கு தகவல் செல்வது வழக்கம்.

இந்த பிரிவு முற்றிலும் கமிஷனரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மாதந்தோறும் இரண்டு, மூன்று முறை பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் கமிஷனர் தலைமையில் நடப்பதும் வழக்கம்.இந்நிலையில் மாநகரில் உள்ள, 8 போலீஸ் நிலையங்களுக்கு தலா ஒரு ஐ.எஸ்., போலீசார் வீதம் பணியாற்றி வருகின்றனர்.

இன்னும் கண்காணிப்பை தீவிரப்படுத்தும் வகையில், தகவல்களை சேகரிக்கும் விதமாக கூடுதல் ஐ.எஸ்., போலீசார் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். தலா ஒருவர் வீதம், 8 நிலையங்களுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் கூறுகையில், ஒருவர் வழக்கு, ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்றவற்றையும், மற்றொருவர், போலீஸ் நிலைய நிலவரங்கள், போலீஸ் ரோந்து வாகனங்கள் உள்ளிட்டவற்றையும் கண்காணிக்கும் வகையில் பணி நியமிக்கப்பட்டுள்ளனர்என்றனர்.

Tags:    

Similar News