உள்ளூர் செய்திகள்

கடையநல்லூர் நகர்மன்ற கூட்டம் நடந்த காட்சி.

அட்டைகுளம் ஊரணியை மேம்படுத்த நடவடிக்கை- கடையநல்லூர் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-07-01 14:34 IST   |   Update On 2022-07-01 14:34:00 IST
  • கடையநல்லூர் நகராட்சி கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  • கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டு குறைகள் குறித்து பேசினர். அதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் ராஜையா, ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் , சுகாதார அலுவலர் இளங்கோ, நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார ஆய்வாளர் சக்திவேல், சிவா முன்னிலை வகித்தனர். தேர்தல் பிரிவு மாரியப்பன் தீர்மானங்களை வாசித்தார்.

கூட்டத்தில் கடையநல்லூர் நகராட்சி அட்டைகுளம் தெரு ஊரணிக்கு கீழ்புறம் உள்ள காலி இடத்தில் சுற்றுச்சுவர் அமைப்பது, தேரடி தெரு முதல் தெருவில் மழைநீர் வடிகால் மற்றும் பேவர் பிளாக் சாலை அமைப்பது,

பேட்டை மலம் பாட்டை ரோடு மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைப்பது, அட்டை குளம் ஊரணியை புணரமைத்து மேம்படுத்துவது, குமந்தாபுரம் கருப்பாநதி அணைக்கட்டு பகுதியில் அமைந்துள்ள கலைமான்நகர் குடியிருப்பு தெருக்களுக்கு பேவர் பிளாக் சாலை அமைத்தல், அணுகு சாலை அமைத்தல் , கருப்பாநதி அணை வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுதல்,

மேலக்கடையநல்லூர் நகராட்சி தொடக்கப்பள்ளியில் மீத்திறன் வகுப்பறை, கழிவுநீர் மற்றும் கழிப்பறை கட்டுவது உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் ரேவதிபாலீஸ்வரன், பூங்கோதை தாஸ், சுபா ராஜேந்திரபிரசாத், தனலெட்சுமி, பாலசுப்பிரமணியன், அப்துல் வஹாப், வளர்மதி, மாலதி, சந்திரா, முருகன், முகையதீன் கனி, மீராள்பீவி, வேல்சங்கரி முத்துக்குமார், சங்கரநாராயணன், பாத்திமா பீவி, நிலோபர், பீரம்மாள், அக்பர்அலி, யாசர்கான், முகமது அலி, மகேஸ்வரி, துர்காதேவி, முகமது முகைதீன், ராமகிருஷ்ணன், சண்முகசுந்தரம், மாரி, முத்துலெட்சுமி, மாவடி க்கால் சுந்தரமகாலிங்கம், தங்கராஜ், செய்யதலி பாத்திமா பங்கேற்றனர்.

முன்னதாக கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்களது வார்டு குறைகள் குறித்து பேசினர். அதற்கு நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

Tags:    

Similar News