உள்ளூர் செய்திகள்

தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை

Published On 2022-12-02 09:02 GMT   |   Update On 2022-12-02 09:02 GMT
  • நாய்கள் புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டன.
  • பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

ஊட்டி

ஊட்டி நகர மன்ற உறுப்பினர் முஸ்தபா செல் போன் எண்ணுக்கு ஒரு சிறுமி போன் செய்து நாங்கள் பி அண்டு டி குடியிருப்பு பகுதியில் வசிக்கிறோம். எங்கள் தெருவில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியவில்லை. நாய்கள் கும்பலா கடிக்கவருகிறது.

தயவு செய்து புடியுங்கள் என பதட்டத்தோடு பேசினார். அவரும் நிச்சயம் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கிறேன் என ஆறுதல் கூறியுள்ளார்.

இதேபோன்று தி.மு.க மாணவர் அணி பொறுப்பாளர் பழக்கடைமுஜி போன்செய்து அதேபகுதியில் பள்ளிக்கு குழந்தையை விடச்சென்ற ஒரு பெண்ணை நாய்கள் துரத்தி ஆடையைபிடித்து கடித்துள்ளது. ஏதாவது செய்யவேண்டும் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதனை கேட்ட நகர மன்ற உறுப்பினர் முஸ்தபா மற்றும் பழக்கடை முஜி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்கூறி நிச்சயமாக நடவடிக்கை எடுப்பதாக கூறினர். நகராட்சி கமிஷனர் காந்திராஜனிடமும், நகராட்சி எஸ்.ஐ மகாராஜாவிடமும் நிலைமையின் விபரீதத்தை எடுத்துச்சொல்லி உடனடி நடவடிக்கைக்கு எடுக்க கோரினர்.

அதிகாரிகளும் உடனடி நடவடிக்கை எடுத்து ஒருமணிநேரத்தில் தெருநாய்களை பிடிக்கும் வாகனத்துடன் 10 பேரை அனுப்பிவைத்தனர்.நாய்களை பிடிக்கும் வாகனத்தை பார்த்த நாய்கள் புதருக்குள் ஓடி ஒளிந்து கொண்டன.

இருந்தும் 5-க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்தனர். மீண்டும் வந்து மீதமுள்ள நாய்களை பிடித்து மாற்று பகுதிகளில் விட்டுவிடுவதாகவும் தெரிவித்தனர்.

உடனே நடவடிக்கை எடுத்த நகரமன்ற உறுப்பினர் முஸ்தபா மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கும், நாய்களை பிடித்த அந்த அமைப்பின் நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து பாராட்டினர்.

Tags:    

Similar News