உள்ளூர் செய்திகள்

அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் கரையை தஞ்சாவூர் கீழ்காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் ஆய்வு.

கொள்ளிடம் ஆற்றில் அளக்குடி பகுதியில் மணல் திட்டை அகற்ற நடவடிக்கை

Published On 2022-09-12 09:33 GMT   |   Update On 2022-09-12 09:33 GMT
  • ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் செல்லும் போது தண்ணீர் எளிதில் சென்று சேர்வதில் தடை ஏற்படுத்துகிறது.
  • ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டு பகுதியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சீர்காழி:

கொள்ளிடம் ஆற்றில் 4வது முறையாக 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தஞ்சாவூர் கீழ் காவிரி வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் கொள்ளிடம் அருகே உள்ள சந்தப்படுகை, நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, அளக்குடி உள்ளிட்ட கிராமங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையை பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

கொள்ளிடம் ஆற்றின் கரை அளக்குடியில்தண்ணீர் மோதி திரும்பும் இடத்தில் கடந்த 2018ம் ஆண்டு ஏற்பட்ட உடைப்பு தற்காலிகமாக சரி செய்ய ப்பட்ட பகுதியை ஆய்வு செய்தார்.

பின்னர் கண்காணிப்பு பொறியாளர் முருகேசன் கூறுகையில், அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் நடு பகுதியில் மணல்மேடு உருவாகியுள்ளது.

இதனால் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகம் செல்லும் போது தண்ணீர் எளிதில் சென்று சேர்வதில் தடை ஏற்படுத்துகிறது.

எனவே எளிதில் ஆற்றில் தண்ணீர் செல்லும் வகையில் ஆற்றின் நடுவில் உள்ள மணல் திட்டு பகுதியை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அளக்குடி, நாதல்படுகை, முதலைமேடுதிட்டு ஆகிய இடங்களில் கொள்ளிடம் ஆற்றின் கரையை தற்போது தற்காலிகமாக சரி செய்யப்பட்டு தொடர்ந்து கரையை வலுவானதாகவும், உயர்த்தியும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அதற்கான மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு சமர்ப்பித்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மயிலாடுதுறை காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகு மார், உதவி பொறியாளர்கள் சிவசங்கர், வெங்கடேசன், கனகசரவணன் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News