உள்ளூர் செய்திகள்

கூடச்சேரியில் அசோலா தீவன உற்பத்தி குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

அசோலா தீவன உற்பத்தி குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம்

Published On 2022-12-17 07:03 GMT   |   Update On 2022-12-17 07:03 GMT
  • பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
  • மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டாரம் கூடச்சேரி கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு அசோலா தீவன உற்பத்தி குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

அசோலாவில் அதிகளவு புரதச்சத்து இருப்பதால் கோழி மற்றும் கால்ந

டைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது. அசோலா வளர்ப்பு செயல் விளக்கத்தினை பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில், கிராமப்புற வேளாண் அனுபவ பயிற்சியின் கீழ் கலந்து கொண்ட தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்கள் செய்து காண்பித்தனர்.

மேலும் தீவன வகைகள், மாட்டுத் தீவனத்தில் குறைந்த விலையில் அசோலா மற்றும் அசோலா சாகுபடி முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி தொழில்நுட்ப மேலாளர் ரவீனா, வேளாண்மை அலுவலர் மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர் செய்திருந்தனர்.

இதில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Tags:    

Similar News