உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து கழகத்தினருடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

விதி முறைகளை கடைபிடிக்காத பஸ் டிரைவர்- கண்டக்டர் மீது நடவடிக்கை: கடலூர் கலெக்டர் எச்சரிக்கை

Published On 2023-06-27 07:05 GMT   |   Update On 2023-06-27 07:05 GMT
  • கடலூர் மாவட்ட தனியார்பஸ் உரிமயாளர்கள் கலந்தாய்வு கூட்டம், கடலூரில் நடைபெற்றது.
  • அனுமதிக்கப் பட்ட தடத்தில் மட்டுமே பஸ்களை இயக்கவேண்டும்.

கடலூர்: 

கடலூர் மாவட்டத்தில் இரு தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்து குறித்தும், பஸ்களின் மீது பெறப்படும் தொடர் புகார்கள் குறித்தும் கலெக்டர் அருண் தம்பு ராஜ் தலைமையில் கடலூர் மற்றும் சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலு வலர்கள் மற்றும் கடலூர் மாவட்ட தனியார்பஸ் உரிமயாளர்கள் கலந்தாய்வு கூட்டம், கடலூரில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்ததாவது:-

கடலூர் மாவட்டத்தில் பஸ்கள் இயக்கம் தொடர் பாக தினந்தோறும் பல்வேறு புகார்கள் தனியார் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் மீது பெறப்படுகிறது. மேல்பட்டாம் பாக்கம்பஸ் விபத்து டிரைவரின் அஜாக்கிரதையால் நடை பெற்றுள்ளது. எனவே இம்மாவட்டத்தில்பஸ் உரிமையாளர்கள் இனி வருங்காலங்களில் கீழ்கண்ட அறிவுரைகளை தவறாது கடைபிடித்து வாகனங்களை இயக்க அறிவுறுத்தி னார். அரசால் நிர்ணயிக்கப் பட்ட வேக வரம்பை மீறி அதிவேகமாக பஸ்களை இயக்ககூடாது. வேக கட்டுப்பாட்டு கருவியை முறையாக பயன்படுத்த வேண்டும். மீறும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அனுமதிக்கப் பட்ட தடத்தில் மட்டுமே பஸ்களை இயக்கவேண்டும். பயணிகளிடம் அனுமதிக் கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. அதிவேகமாகவும், சாலையில் செல்லும் பிற வாகனங்களை அச்சுறுத்தும் வகையில்க பஸ்களை இயக்கக்கூடாது. அனுமதிக்கு புறம்பாக காற்று ஒலிப்பான்கள், பல்ஒலிப்பான்கள் பயன் படுத்தக்கூடாது. ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பயணி களிடம் மரியாதை குறைவாக நடந்து கொள்ளக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நிறுத்தங் களில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்க வேண்டும். மேலும் பஸ்கள் இயக்கம் தொடர்பான அனைத்து விதிமுறைகளை யும் கடைபிடித்து வாகனங் களை இயக்க வேண்டும்.

மேற்காணும் அறிவுரை களை தவறாது கடைபிடித்து பஸ்களை இயக்கவேண்டும். இக்கூட்டத்தின் வயிலாக பஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்து நர்களுக்கும் முதல் வாய்ப்பு வழங்குவதாகவும் தவறும் பட்சத்தில் அனுமதி சீட்டின் மீதும் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் உரிமத்தின் மீது மோட்டர் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கடலூர் மாவட்டத்தில் இயக்கப்படும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் அனைத்தும் அனு மதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படுவது குறித்து, அவ்வப்போது திடீர் வாகனத் தணிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதன்படி மோட்டார் வாக னங்கள் சட்ட விதிகளுக்கு புறம்பாக இயக்கப்படும் பஸ்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News