உள்ளூர் செய்திகள்
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த நரவள்ளிக்காய் விற்பனைக்கு குவிப்பு
- மலை பிரதேசங்களில் நரவள்ளிக்காய் அதிக அளவில் விளையும்.
- ஏற்காடு, கொல்லி மலையில் தற்போது நர வள்ளிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால், அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது.
சேலம்:
மலை பிரதேசங்களில் நரவள்ளிக்காய் அதிக அளவில் விளையும். ஏற்காடு, கொல்லிமலை, பச்சமலை, ஜவ்வாது மலை உள்பட பல மலை பிரதேசங்களில் ஒவ்வொரு ஆண்டும் ேம, ஜூன், ஜூலை மாதங்களில் நரவள்ளிக்காய் விளைச்சல் அமோகமாக இருக்கும்.
ஏற்காடு, கொல்லி மலை
ஏற்காடு, கொல்லி மலையில் தற்போது நர வள்ளிக்காய் சீசன் களைகட்டியுள்ளதால், அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வருகிறது. இவ்வாறு விற்பனைக்கு வரும் காயை அதன் மருத்துவ குணம் தெரிந்து, ெபாதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், நரவள்ளிக்காய் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவை. ஒரு கிலோ ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் 2 மாதத்திற்கு இக்காய் வரத்து இருக்கும், என்றனர்.