சின்னசேலம் அருகே விபத்து: மகள் கண் முன்னே தாய் பலி
- டிராக்டர் சிவகாமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட வி.பி. அகரம் கிராமத்தைச் சேர்ந்த சிவபெருமாள் என்பவர் தனது சொந்த அக்காள் அஞ்சலையின் மகள் சிவகாமியை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்ததார். இந்நிலையில் நேற்று மதியம் கள்ளக்குறிச்சியில் உள்ள உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் சிவகாமியும், தாய் அஞ்சலையும் சென்றனர். இவர்கள் கணியாமூர் காட்டுக்கொட்டாய் பகுதியில் சென்றபோது பின்னால் கரும்பு ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த டிராக்டர் சிவகாமி ஓட்டி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் அஞ்சலை உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார். சிவகாமி சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். தனது கண் முன்பே தாய் விபத்தில் பலியானதை பார்த்து சிவகாமி கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது. இது குறித்து சிவபெருமாள் கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.