உள்ளூர் செய்திகள்
பண்ருட்டியில் விபத்து தடுப்பு கட்டையில் மோதி நின்ற லாரி
வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர்த்தப்பினர்.
கடலூர்:
கடலூரில் இருந்து நேற்று நள்ளிரவு பண்ருட்டிக்கு லாரி ஒன்று லோடு ஏற்றிக்கொண்டுஅதிவேகமாக வந்தது. இந்த லாரிபண்ருட்டி கடலூர் ரோடு யூனியன் அலுவலகம் அருகில் வேகமாக வந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டையில் மோதி நின்றது.அப்போது அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள்,பாதசாரிகள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி உயிர்த்தப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் சம்பவத்துக்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து அதிவேகமாக வாகனம்ஓட்டிய லாரி டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.