உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் நள்ளிரவில் விபத்து - லாரி மோதி அனல்மின் நிலைய ஊழியர் பலி
- குருசர பிரகாஷ் நேற்று நள்ளிரவு வேலை முடிந்து தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார்.
- அங்குள்ள பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் இந்திரா நகரை சேர்ந்தவர் குருசர பிரகாஷ் (வயது 23). இவர் தூத்துக்குடி புதிய அனல் மின் நிலையத்தில் வேலை செய்து வந்தார். நேற்று நள்ளிரவு வேலை முடிந்து தூத்துக்குடி - மதுரை பைபாஸ் ரோட்டில் சென்றுகொண்டிருந்தார்.
அங்குள்ள பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது ஒரு லாரி அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த குருசர பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சிப்காட் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.