உள்ளூர் செய்திகள்

திருவள்ளூரில் ஏசி பழுது பார்க்கும் தொழிலாளர் அமைப்பு ஆலோசனை கூட்டம்

Published On 2023-09-25 12:16 IST   |   Update On 2023-09-25 12:16:00 IST
  • ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது.
  • நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு, வாடிக்கையாளர்கள் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள், கருத்து பரிமாற்றங்கள் வழங்கப்பட்டன.

பொன்னேரி:

தமிழ்நாடு குளிர்சாதனம் பழுது பார்க்கும் தொழிலாளர் அமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் மாநிலத் தலைவர் மோகன் தலைமையில் மாநில செயலாளர் பாலாஜி முன்னிலையில் நடைபெற்றது.

கூட்டத்தில் ஏசி தொழிலாளர் பாதுகாப்பு, தொழிலாளர்களை ஒன்று சேர்க்கும் பணி, தொழிலாளர்கள் நல வாரிய திட்டம், பொன்னேரி பகுதி நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு, வாடிக்கையாளர்கள் அணுகுமுறை உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள், கருத்து பரிமாற்றங்கள் வழங்கப்பட்டன.

இதில் மாநில பொருளாளர் ஞானவேல், திருவள்ளூர் மாவட்ட தலைவர் விஜயகுமார் செயலாளர் கார்த்திக ராஜன், பொருளாளர் சுந்தர்ராஜன், பகுதி நிர்வாகி ரகு, நூர்தின், சரத்குமார், அருள் உள்பட ஏசி பழுது பார்க்கும் தொழிலாளர் அமைப்பு உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சி ஏற்பாட்டினை நூர்தின், சரத்குமார் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News