உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் வாலிபரை ஏமாற்றி ரூ.8.3 லட்சம் அபேஸ்

Published On 2022-12-24 15:41 IST   |   Update On 2022-12-24 15:41:00 IST
  • குமாரின் கணக்கிலிருந்து ரூ.8.3 லட்சம் வரை அனுப்பி வைத்துள்ளார்.
  • ஆனால் குமாருக்கு எந்த பரிசு பொருளும் வரவில்லை.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணிஹல்லி புதூர் பகுதியை சேர்ந்தவர் வேடி. இவரது மகன் குமார் (வயது 40).

கடந்த பிப்ரவரி மாதம் குமாரின் செல்போனுக்கு ஒரு மர்ம அழைப்பு வந்தது. பின்னர் அதில் பேசிய நபர் அடிக்கடி குமாரிடம் பேசி நண்பராகமாறியுள்ளார்.

இதையயடுத்து வெளிநாட்டிலிருந்து குமாரின் பிறந்தநாளுக்காக விலையுயர்ந்த பரிசு ஒன்றை வரவழைத்துள்ளதாக கூறியுள்ளார்.

இந்த பரிசு பொருளை இந்தியாவுக்கு கொண்டுவர வரி கட்டவேண்டும் என்று கூறி குமாரிடம் இருந்து பணம் பெற்றுள்ளார்.இவ்வாறு வெவ்வேறு வகைகளில் குமாரின் கணக்கிலிருந்து ரூ.8.3 லட்சம் வரை அனுப்பி வைத்துள்ளார்.ஆனால் குமாருக்கு எந்த பரிசு பொருளும் வரவில்லை.

அதுவரை தொடர்பில் இருந்த மர்ம ஆசாமி அதன்பிறகு பேசவில்லை இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் குமார் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு பணத்தை சுருட்டிய மர்ம ஆசாமியைத்தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News