உள்ளூர் செய்திகள்

சென்னையில் ஆவின் பால் வினியோகம் பாதிப்பு

Published On 2023-05-31 10:07 GMT   |   Update On 2023-05-31 10:07 GMT
  • பால் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் தாமதமாக கிடைத்ததால் கடைகளுக்கு குறித்த நேரத்தில் வினியோகம் செய்ய முடியவில்லை.
  • மதுரவாயல், நெற்குன்றம், வானகரம், பூந்தமல்லி, போரூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது.

சென்னை:

சென்னையில் ஒரு சில பகுதிகளில் ஆவின் பால் வினியோகம் இன்று பாதிக்கப்பட்டது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய பால் வரத்து பாதிக்கப்பட்டதால் 2-வது நாளாக பால் பாக்கெட் உற்பத்தியில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை 6 மணி வரை அம்பத்தூர் பால் பண்ணையில் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் ஏற்றப்படாததால் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் பால் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் தாமதமாக கிடைத்ததால் கடைகளுக்கு குறித்த நேரத்தில் வினியோகம் செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக மதுரவாயல், நெற்குன்றம், வானகரம், பூந்தமல்லி, போரூர், முகப்பேர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரம் லிட்டருக்கு மேல் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்பட்டது.

ஒப்பந்த தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் பால் அடுக்கி கொண்டுவரப்படும் பிளாஸ்டிக் டப்புகள் பற்றாக்குறை காரணமாக அம்பத்தூர், சோழிங்கநல்லூர், காக்களூர் பால் பண்ணையில் இருந்து நேற்று சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு பால் வரத்து குறைந்தது என்று கூறப்படுகிறது.

Tags:    

Similar News