உள்ளூர் செய்திகள்

சேலத்து மாரியம்மன் கோவிலில் ஆடிமாத கஞ்சி கலய ஊர்வலம்

Published On 2023-08-07 15:59 IST   |   Update On 2023-08-07 15:59:00 IST
  • விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் மேல தாளம் முழங்க கஞ்சி கலயத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
  • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அரூர்,

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே தரிப்பள்னி ஏழுமலை நகரில் சேலத்து மாரியம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் பிரசித்திபெற்ற இக்கோயிலின் நடப்பாண்டு ஆடிமாத திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு மூன்று கால பூஜை நடைபெற்றது. கடந்த 1-ம் தேதி ஆடி பவுணர்மி அன்று அம்மனுக்கு கூல் கூற்றும் நிகழ்ச்சி நடந்து.

இதனை தொடர்ந்து நேற்று திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. இதில் காப்புகட்டி விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் மேல தாளம் முழங்க கஞ்சி கலயத்தை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.

இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News