ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஒப்படைக்கும் போராட்டம்
- விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
- இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் 50 ஆண்டுகள் ஆகியும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையிடம் பல முறை மனு அளித்தும், பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை இல்லை எனக்கூறி கடந்த சில வாரங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் முன்பு வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை திரும்ப ஒப்படைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு மாவட்ட நிர்வாகம் மற் றும் ஆதிதிராவிடர் நலத்துறையை கண்டித்து கிருஷ்ணகிரி மத்திய மாவட்ட விடுதலை சிறுத் தைகள் கட்சியின் சார்பில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் மாதேஷ் தலைமை தாங்கினார். கட்சியின் தொகுதி செய லாளர் தியாகு, தொகுதி துணை செயலாளர் முனிசந்திரன், ஒன்றிய செயலாளர் ஆலபட்டி ரமேஷ், மாதையன், பாக்யராஜ், சசிகுமார், எடிப்பள்ளி கிருஷ்ணன், தியாகு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதையொட்டி புதிய வீட்டு வசதி வாரிய குடியி ருப்பு பஸ் நிறுத்தத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஊர்வலமாக நீதிமன்றத்தை நோக்கி சென்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், உதவி கலெக்டர் ர் பாபு, தாசில் தார் சம்பத் ஆகியோர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோரிக்கைகள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்ச னைகளை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை யடுத்து 15 நாட்களுக்குள் கோரிக் கைகள் நிறை வேற்றவிட்டால் மீண் டும் நீதிமன்றத்தில் ஒப்ப டைக்கும் போராட்டம் நடைபெறும் எனக்கூறி போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.