உள்ளூர் செய்திகள்

கோவையில் உடல் கருகி இளம்பெண் பலி

Published On 2023-01-11 14:54 IST   |   Update On 2023-01-11 14:54:00 IST
  • ரம்யா விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்து கொண்டு இருந்தார்.
  • உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் ரம்யா சத்தம் போட்டார்.

கோவை,

கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ரம்யா (வயது 31).

சம்பவத்தன்று இவர் விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரம்யாவின் ஆடையில் தீ பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் ரம்யா சத்தம் போட்டார்.

இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மீட்டனர்.

பின்னர் கோவில் பாளையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் ரம்யா பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பெரிய நாயக்கன் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

Similar News