உள்ளூர் செய்திகள்
பகண்டைகூட்டுரோடு அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை
- பகண்டைகூட்டுரோடு அருகே இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மனமுடைந்த வினிதா வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோடு அடுத்த அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகள் வினிதா(22). பட்டப்படிப்பு முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் வீட்டு வேலையை செய்ய வேண்டியது தானே என்று அவரது பெற்றோர் திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி பலியானார். இது குறித்து அவரது தாய் தேவகி கொடுத்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்கள்.