உள்ளூர் செய்திகள்
- அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 71). இவருக்கு 2 மகனும் மஞ்சு (28) என்ற ஒரு மகளும் உள்ளனர்.
- இளம்பிள்ளைக்கு சேலை மடிக்கும் வேலைக்கு சென்று வந்தார்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் 7-வது வார்டு அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 71). இவருக்கு 2 மகனும் மஞ்சு (28) என்ற ஒரு மகளும் உள்ளனர். மஞ்சுவிற்கு திருமணம் ஆகிவிட்டது. அவர் கணவரை பிரிந்து தந்தை ராஜி வீட்டில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மேலும் இளம்பிள்ளைக்கு சேலை மடிக்கும் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி வேலைக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை.
அக்கம் பக்கம் உறவினர் வீடுக்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி ராஜி தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மஞ்சுவை தேடி வருகின்றனர்.