உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
சமையல் செய்தபோது தீ பிடித்து இளம்பெண் பலி
- சமையல் செய்தபோது தீ பிடித்து இளம்பெண் பலியானார்
- தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவாரம் 4-வது வார்டு நாடார் வடக்குத் தெருவைச் சேர்ந்த கணேசன் மகள் கணேஷ்வரி (வயது 18). சம்பவத்தன்று கணேசன் மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர்.
வீட்டில் கணேஷ்வரி கியாஸ் அடுப்பை பற்ற வைத்து சமையல் செய்த போது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீ பிடித்தது. பலத்த தீக்காயங்களுடன் உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.