உள்ளூர் செய்திகள்

அனுமதி இல்லாமல் மரம் வெட்டிய தொழிலாளி சிக்கினார்

Published On 2023-03-17 09:41 GMT   |   Update On 2023-03-17 09:41 GMT
  • சேலம் ஏற்காடு நெடுஞ்சாலை குமாரசாமிப்பட்டி பகுதியில் மரம் வெட்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் உறுதி அளித்தனர்.
  • வெட்டப்பட்ட மர கிளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்:

சேலம் ஏற்காடு நெடுஞ்சாலை குமாரசாமிப்பட்டி பகுதியில் இன்று காலை வின்சென்ட் பகுதியை சேர்ந்த அழகு ராஜன் என்பவர் தனது வேலை ஆட்களை வைத்து எந்திரங்கள் மூலம் அப்பகுதியில் உள்ள பழமை வாய்ந்த அரச மரம் உள்ளிட்ட மரங்களை வெட்டிக் கொண்டு இருந்தார்.

இதனை பார்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அனுமதி பெற்று தான் இந்த மரங்களை வெட்டுகிறீர்களா? என்று கேட்டதற்கு இதை சொல்வதற்கு நீங்கள் யார் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அழகு ராஜன், மரம் வெட்டும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு புறப்பட்டுச் செல்ல முயன்றார். அப்போது அங்கு போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் வந்து அழகு ராஜனை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அரசு அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டியது தெரியவந்தது.

இதையடுத்து அழகு ராஜன் மீது மரம் வெட்டியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் உறுதி அளித்தனர். வெட்டப்பட்ட மர கிளைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News