உள்ளூர் செய்திகள்

கோவை கணுவாயில் 108 ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பெண்

Published On 2023-07-05 14:32 IST   |   Update On 2023-07-05 14:32:00 IST
  • தேவிக்கு பனிக்குடம் உடைந்து, குழந்தையின் தலை வெளியே வந்தது.
  • பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

கோவை,

கோவை கணுவாயை சேர்ந்த கண்ணன் மனைவி தேவி (வயது28). நிறைமாத கர்ப்பிணி. இவருக்கு இன்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. எனவே உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்து பார்த்தனர்.

இதில் தேவிக்கு பனிக்குடம் உடைந்து, குழந்தையின் தலை வெளியே வந்தது.

இதையடுத்து ஆம்புலன்சு மருத்துவ நிபுணர் தமிழழகன், பைலட் சக்தி குமார் ஆகியோர், உறவினர்களின் உதவியுடன் பிரசவம் பார்த்தனர். இதில் தேவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு தாயும், சேயும் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கோவை மாவட்டம் கணுவாயில் இளம்பெண்ணுக்கு இக்கட்டான நேரத்தில் பிரசவம் பார்த்த ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News