உள்ளூர் செய்திகள்

விபத்தில் சிக்கிய பஸ்சின் பின் சக்கரம் கழன்று கிடக்கும் காட்சி.

கெலமங்கலம் அருகேதனியார் பஸ் வயலில் கவிழ்ந்து பெண் பலி

Published On 2022-12-26 15:16 IST   |   Update On 2022-12-26 15:16:00 IST
  • பஸ்சின் டிரைவர் அதிவேகமாக ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது.
  • யசோதா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், நாகமங்கலத்திலிருந்து பெங்களூருவுக்கு இன்று காலை தனியார் பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

புறப்பட்டது முதலே பஸ்சின் டிரைவர் அதிவேகமாக ஒட்டி சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கெலமங்கலம் அருகே பஸ் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரம் இருந்த வயலில் கவிழ்ந்தது. இதையடுத்து பயணிகள் கூச்சலிட்டனர்.

இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

இதில் பஸ்சின் அடியில் சிக்கிய யசோதா என்ற 40 வயது மதிக்கத்தக்க பெண் உடல் நசுங்கி உயிரிழந்தார். மேலும் பஸ்சில் பயணித்த 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேன்கனிக்கோட்டை, ஓசூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்தில் சிக்கிய பஸ்சை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர்.

விபத்தில் சிக்கிய பஸ்சின் பின்சக்கரங்கள் தனியாக கழன்று ஓடிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து பஸ் ஓட்டுனரிடம் கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News