சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் மோதிக்கொண்ட லாரிகள்.
சரக்கு வாகனம் மீது லாரி மோதி விபத்து
- சாலையில் திடீரென திரும்ப முயன்ற போது இரு லாரிகளும் மோதிக்கொண்டன.
- ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் இருந்து கொத்த மல்லி மூட்டை ஏற்றி கொண்டு ஒரு லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சூளகிரி அருகே சின்ன தியாகரசனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (வயது 35) என்பவர் ஓட்டி சென்றார்.
அப்போது ஒசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் பகுதியில் நேற்று மாலை 6 மணி அளவில் லாரி வந்த போது மற்றொரு லாரி சாலையில் திடீரென திரும்ப முயன்ற போது இரு லாரிகளும் மோதிக்கொண்டன.லாரியில் இருந்த கொத்த மல்லி மூட்டைகள் சாலையில் சரிந்து விழுந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூளகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினி மற்றும் காவலர்கள் ஒரு மணி நேரம் போராடி படுகாயம் அடைந்த வெங்கடேசை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் ஒசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு 5 கிலோ மீட்டர் தூரம் வாகன நெரிசல் எற்பட்டது.
இந்த விபத்து குறித்து சூளகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னார் வளைவு பகுதியில் விபத்து அதிகமாக ஏற்படுவதால் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.