உள்ளூர் செய்திகள்

திருட்டு மொபட்டில் ஜாலியாக உலா வந்த வாலிபர்

Published On 2022-09-06 09:47 GMT   |   Update On 2022-09-06 09:47 GMT
  • அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
  • இறைச்சி கடைக்கு கறி வாங்க மொபட்டில் சென்றார்.

கோவை,

கோவை பி.என்.புதூர் பொன் நகரை சேர்ந்தவர் மகேஷ்வரி (வயது 32). தனியார் நிறுவனத்தில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு இறைச்சி கடைக்கு கறி வாங்க மொபட்டில் சென்றார். பின்னர் மொபட்டை இறைச்சி கடை முன்பு நிறுத்தி விட்டு கடைக்கு சென்று கறி வாங்கி திரும்பினார். அப்போது அவரது மொபட்டை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்வரி மறுநாள் காலையில், போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என நினைத்து வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் ஆர்.எஸ்.புரம் போலீஸ் நிலையத்துக்கு மொபட் காணாமல் போனது குறித்து புகார் அளிக்க சென்றார். அப்போது பி.என்.புதூர் மாரியம்மன் கோவில் அருகே மகேஷ்வரியின் மொபட்டில் வாலிபர் ஒருவர் ஜாலியாக சுற்றி கொண்டிருந்தார். இதனைப்பார்த்த அவர் அக்கம்பக்க த்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் சீரநாயக்கன்பாளையம் திலகர் வீதியை சேர்ந்த தொழிலாளி வேலு (29) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டு மொபட்டில் ஜாலியாக உலா சென்ற வாலிபர் அதன் உரிமையாளரிடமே சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News