உள்ளூர் செய்திகள்

கோவையில் 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்

Published On 2023-06-01 09:01 GMT   |   Update On 2023-06-01 09:01 GMT
  • சிறுமியிடம், விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
  • இதுகுறித்து சிறுமியின் தந்தை சிறுமுகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேட்டுப்பாளையம்,

கோவை சிறுமுகை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவரது தாய், தந்தையினர் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். தந்தை கூலி வேலைக்கு சென்று விடுவதால் சிறுமி மட்டுமே வீட்டில் தனியாக இருப்பார்.

இவரது பக்கத்து வீட்டில் மணிகண்டன் (28) என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் மாணவியிடம் சென்று அடிக்கடி பேசி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை நோட்ட மிட்ட வாலிபர், சிறுமியின் வீட்டிற்கு சென்று,விளையாடலாம் என கூறி தனது வீட்டிற்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியில் கூறினால் கொன்றுவிடுவதாக மிரட்டலும் விடுத்தார். இதனால் மனம் நொந்துபோன சிறுமி நேற்று தனக்கு நடந்த சம்பவங்களை தந்தையிடம் கூறினார்.

இதைகேட்டு அதிர்ச்சியான அவர் உடனடியாக இதுகுறித்து சிறுமுகை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மணிகண்டன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

Similar News