உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2023-05-02 07:06 GMT   |   Update On 2023-05-02 07:06 GMT
  • பாரூக் தனது மோட்டார் சைக்கிளில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பிற்கு சென்றார்.
  • விபத்தில் பாரூக் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் கருமர மேஸ்திரி தெருவை சார்ந்த ரகீம் பேக் மகன் பாரூக் 27, தி.மு.க 8-வது வார்டு பிரதிநிதி அன்சாரி மகன் முகமது ரியாஸ் (19) பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் பாரூக் தனது மோட்டார் சைக்கிளில் முகமது ரியாசை பின்னால் உட்கார வைத்துக் கொண்டு நேற்று சேலத்தில் இருந்து விழுப்புரம் வருகை புரிந்த விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்பிற்கு சென்றார்.

அரசூரில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு இரவு 9 மணி அளவில் திருவெண்ணைநல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது அரசூர் தனியார் பங்க் அருகே செல்லும் பொழுது அரசூர் இந்திரா நகரை சார்ந்த புனிதவதி (40) சாலையை கடக்க முயன்ற போது பாரூக் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் புனிதவதி மீது மோதி கீழே விழுந்தது. இதில் பாரூக் உள்பட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

இவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காய மடைந்த பாரூக் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்து மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனைக்கு இன்று அதிகாலை அனுப்பி வைத்தனர். அங்கு வரும் வழியிலேயே பாரூக் இறந்து விட்டதாக தெரிவித்த னர். இது குறித்து புகாரின் பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். காயமடைந்த முகமது ரியாஸ், புனிதவதி ஆகியோர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News