உள்ளூர் செய்திகள்
- நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.
- சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சேலம்:
சேலம்- மல்லூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு காச்சிக்குடா எக்ஸ்பிரஸ் ெரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இது குறித்து ரெயிலின் லோகோ பைலட் கொடுத்த தகவலின்பேரில் சேலம் ரெயில்வே போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இவரது பெயர் மற்றும் ஊர் விபரம் தெரியவில்லை. பலியான வாலிபர் வலது கையில், தாய் குழந்தை என பச்சைக்குத்தப்பட்டுள்ளது. சிவப்பு வெள்ளை புளூ கலரில் பனியன், மஞ்சள் கலர் பேண்ட் அணிந்திருந்தார். இவரை பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தால் அது குறித்து போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.