உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் ஆசிரியர் கண்டித்ததால் பள்ளியில் விஷம் குடித்த மாணவர்

Published On 2022-07-20 13:49 IST   |   Update On 2022-07-20 13:49:00 IST
  • விருத்தாசலத்தில் ஆசிரியர் கண்டித்ததால் பள்ளியில் விஷம் குடித்த மாணவரால் பரபரப்பு நிலவியது.
  • மேல்சிகிச்சை தேவைப்பட்ட அவரை உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர்.

கடலுார்:

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அருகே முகாசாபரூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். அவர் தலைமுடியை அதிகமாக வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று பள்ளிக்கு சென்ற அவரை ஆசிரியர் முடியை ஒழுங்காக வெட்டி விட்டு பள்ளிக்கு வருமாறு கூறி கண்டித்து வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பியுள்ளார். இதனால் வேதனையடைந்த அந்த மாணவன் நேற்று மதியம் பள்ளிவளாக்தில் வயலில் தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனால் மயக்கமடைந்த அவரை கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரை அருகிலுள்ள மங்கலம்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். மேலும் மேல்சிகிச்சை தேவைப்பட்ட அவரை உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மங்கலம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவர் தற்கொலைக்கு முயன்றது விருத்தாசலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News