உள்ளூர் செய்திகள்

பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத்துறையினர்.

நத்தம் அருகே திருமண மண்டபத்தில் புகுந்த பாம்பு

Published On 2023-05-14 11:14 IST   |   Update On 2023-05-14 11:14:00 IST
  • 6 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.
  • தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

நத்தம்:

நத்தம் அருகே சிறுகுடி பகுதியில் தனியார் திருமண மண்டபம் உள்ளது. இங்கு சமையலுக்காக விறகுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதில் 6 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்ததால் பொதுமக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுகுறித்து நத்தம் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்குள் பாம்பை வனத்துறையினர் விட்டனர்.

Tags:    

Similar News