உள்ளூர் செய்திகள்

அன்னூரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விரைவில் கடை அடைப்பு போராட்டம்

Published On 2022-11-15 09:48 GMT   |   Update On 2022-11-15 09:48 GMT
  • 6 ஊராட்சிகளில் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.
  • இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

அன்னூர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர் ஒன்றியங்களில் உள்ளபள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரைசெங்கப்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் வாயிலாக சிப்காட் அமைக்க அரசு முடிவு செய்தது.

இதனை கண்டித்து அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அன்னூர் சிட்கோ அமைப்பதற்காக 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதனால் இப்பகுதி விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நிலையில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நமது நிலம் நமதே போராட்டக்குழுவின் சார்பில் அன்னூரை அடுத்துள்ள குழியூரில் 300- க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 500- க்கும் மேற்பட்ட விவசாயிகள் இருசக்கர வாகன பேரணி நடத்தினர். மன்னீஸ்வர சுவாமி கோவில் முன்பு பேரணி நிறைந்தது. தொடர்ந்து அன்னூர் போலீஸ் நிலையம் சென்று போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு விவசாயிகள் மனு அளித்தனர்.

வணிகர் சங்கங்களுடன் பேசி விரைவில் அன்னூரில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News