உள்ளூர் செய்திகள்

கிராமத்தில் அறுவடை செய்யப்பட்ட அரியவகை சிறு தக்காளி.

அரிய வகை இலந்தைப்பழ தக்காளிவாழப்பாடி பகுதியில் அறுவடை

Published On 2023-04-02 14:35 IST   |   Update On 2023-04-02 14:35:00 IST
  • வாழப்பாடி பகுதி கிராமங்களில் இன்றளவிலும் நாட்டுரக காய்கறிகளை பாரம்பரிய முறையில் ஏரா ளமான விவசாயிகள் பயி ரிட்டு வருகின்றனர்.
  • இந்த தக்காளியை விற்பனை செய்யாமல், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதி கிராமங்களில் இன்றளவிலும் நாட்டுரக காய்கறிகளை பாரம்பரிய முறையில் ஏரா ளமான விவசாயிகள் பயி ரிட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக பல்வேறு வகையான வீரிய ஒட்டு வகை, மரபணு மாற்றம் செய்யப்பட்ட தக்காளி மற்றும் காய்கறிகள் பயிரிப்படுவது அதிகரித்துள்ளது.

ஆனால், இலந்தைப்பழம் அளவிற்கு சிறிய உருவிலான ருசி மற்றும் சாறு மிகுந்த அரிய வகையான சிறு தக்காளியை கைவிடாமல், வாழப்பாடி பகுதி விவசாயிகள் சிலர் பயரிட்டு வருகின்றனர். இந்த தக்காளியை விற்பனை செய்யாமல், வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்ற னர்.

Tags:    

Similar News