உள்ளூர் செய்திகள்

ஆரணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு வினாடி-வினா நிகழ்ச்சி

Published On 2023-07-16 09:07 GMT   |   Update On 2023-07-16 09:07 GMT
  • வினாடி வினா நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார்.
  • முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர்பாபு வரவேற்றார்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணியில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில், பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் பொன்னேரியில் இயங்கி வரும் தமிழாலயா இலக்கிய அமைப்பின் சார்பில் மாணவிகளுக்கான வினாடி-வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், பங்கேற்ற மாணவிகளுக்கும் சான்றிதழ்கள்,நினைவு பரிசு, பதக்கம் உள்ளிட்டவை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் இ.காவேரி தலைமை தாங்கினார். தமிழாலயா அமைப்பின் நிறுவனரும், அமைப்பாளருமான பொன்.தாமோதரன் முன்னிலை வகித்தார்.வினாடி வினா நிகழ்ச்சியை ஆரணி பேரூராட்சிமன்ற தலைவர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தார். வெற்றி பெற்ற அணிகளுக்கு ஆரணி பேரூர் திமுக செயலாளர் பி.முத்து நினைவு பரிசு, சான்றிதழ், பதக்கம் உள்ளிட்டவர்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், தமிழாலயா நிர்வாகிகள் கவிஞர்கள் சிவலிங்கம், தனுஷ்கோடி, நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக அனைவரையும் உதவி தலைமை ஆசிரியர் பாஸ்கர்பாபு வரவேற்றார்.

முடிவில், உதவி தலைமை ஆசிரியர் தர்மலட்சுமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News