உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த மலைப்பாம்பை பிடித்து காட்டில் விட்டனர்

Published On 2022-12-27 10:00 GMT   |   Update On 2022-12-27 10:00 GMT
  • 7 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று நுழைந்தது.
  • பிடிபட்ட பாம்பை நாரலப்பள்ளி காப்பு காட்டில் விட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பகுதியில் கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் வனப் பகுதியில் இருந்து மலைப்பாம்பு, சாரப்பாம்பு போன்ற வன உயிரினங்கள் அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கு வருவது அடிக்கடி நடக்கின்றன.

இந்நிலையில் கிருஷ்ணகிரி சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றும் மழை பெய்த நிலையில் பெரியமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நாகராஜபுரம் புதிய குடியிருப்பு பகுதியில் 7 அடி நீளமுள்ள மலை பாம்பு ஒன்று நுழைந்தது.

இதை கண்ட பொது மக்கள் கிருஷ்ணகிரி வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனச்சரகர் ரவியின் உத்தரவின் பேரில், வனக்காவலர் குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் பழனிசாமி, மாதப்பன், ஆகியோர் விரைந்து வந்து பாம்பை பிடித்தனர்.

பிடிபட்ட பாம்பை நாரலப்பள்ளி காப்பு காட்டில் விட்டனர்.

Tags:    

Similar News