உள்ளூர் செய்திகள்

ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் தொகையில் 10 ஊராட்சிகளுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

Published On 2023-05-16 15:57 IST   |   Update On 2023-05-16 15:57:00 IST
  • மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
  • எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே. ரமேஷ் தலைமை தாங்கினார்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கோடுவெளி, தண்டலம், பெரியபாளையம், கன்னிகைப்பேர், தாமரைப்பாக்கம், கன்னிகாபுரம், இலட்சிவாக்கம், ஆத்துப்பாக்கம், காக்கவாக்கம், ஏனம்பாக்கம் உள்ளிட்ட பத்து ஊராட்சிகளுக்கு தலா ரூ.26,500 தொகையில் 15-ம் நிதி குழு மானியம் மற்றும் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.26 லட்சத்து 50 ஆயிரம் தொகையில் மூன்று சக்கர மின்கலன் வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி பெரியபாளையத்தில் உள்ள எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, எல்லாபுரம் ஒன்றிய பெருந்தலைவர் வடமதுரை கே. ரமேஷ் தலைமை தாங்கினார். எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பி.ஜே.மூர்த்தி, துணைப்பெருந்தலைவர் வக்கீல் கே.சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜே.கோவிந்தராஜன், மாநில ஆதிதிராவிட நலக்குழு செயலாளரும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினருமான ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டு பத்து ஊராட்சிகளுக்கு மூன்று சக்கர மின்கலன் வண்டிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினர்.

இந்நிகழ்ச்சியில், கே.வி.லோகேஷ், ஆ.சத்தியவேலு, வக்கீல்கள் எ.சீனிவாசன், முனுசாமி, வடமதுரை அப்புன், வெங்கல் வி.ஜே.சீனிவாசன், கோடுவெளி குமார், தாமரைப்பாக்கம் கீதா துளசிராமன், கன்னிகைப்பேர் காயத்ரி உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில், வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் உதயசங்கர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News