உள்ளூர் செய்திகள்

மரிய ஜினா ஜான்சன்.

சத்யபாமா பல்கலைக்கழகத்துக்கு 'ஏ பிளஸ் பிளஸ்' தர சான்றிதழ்

Published On 2023-11-19 09:13 GMT   |   Update On 2023-11-19 09:13 GMT
  • உயர்கல்வி நிறுவனம் 35 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் ஜேப்பியாரால் உருவாக்கப்பட்டது.
  • ஒழுங்குமுறை சட்டம் 2018 உரிமையின்படி தரம் உயர்த்தியுள்ள தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சென்னை:

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்திற்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் 'ஏ பிளஸ் பிளஸ்' தரத்தை வழங்கியுள்ளது.

இது குறித்து பல்கலைக் கழக வேந்தர் டாக்டர் மரிய ஜினா ஜான்சன் கூறியதாவது:-

இந்த உயர்கல்வி நிறுவனம் 35 ஆண்டுகளுக்கு முன்னர் டாக்டர் ஜேப்பியாரால் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் 'ஏ பிளஸ் பிளஸ்' தரத்தை வழங்கியுள்ளது

2023-ம் ஆண்டின் சாதனைகளில் ஒன்று. பல்கலைக்கழக மானிய குழு, சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தை நிகர்நிலை பல்கலைக்கழகம் வகை 1-ல் யூ.ஜி.சி. ஒழுங்குமுறை சட்டம் 2018 (தரப்படுத் தப்பட்ட சுயாட்சியை வழங்கும் பல்கலைக்கழக வகைப்படுத்துதல்) உரிமையின்படி தரம் உயர்த்தியுள்ள தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நமது நிறுவனத்தின் மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் அனைவரையும் வாழ்த்துவதுதோடு நமது எதிர்க் கால முயற்சிகளுக்கான உங்களுடைய மேலான ஒத்துழைப்பையும் எல்லை யற்ற மற்றும் பயனுள்ள பங்களிப்பையும் இந்த தேசத்துக்கு வழங்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News