உள்ளூர் செய்திகள்

புகையிலை பொருட்கள் விற்பனை செய்தவர் கைது

Published On 2022-10-25 14:59 IST   |   Update On 2022-10-25 14:59:00 IST
  • 1,145 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
  • ஆட்டோ, காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ,கூடலூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க டி.எஸ்.பி.மகேஷ்குமாா் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசாா் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.

இந்நிலையில், ராஜகோபாலபுரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ, காரை நிறுத்தி சோதனை செய்தனா். அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக நடத்திய விசாரணையில், வேடன்வயல் பகுதியைச் சோ்ந்த தேவராஜ் (40) என்பவா் கா்நாடக மாநிலத்திலிருந்து புகையிலை பொருட்களை வாங்கிவந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தேவராஜை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த 1,145 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

Tags:    

Similar News