உள்ளூர் செய்திகள்

புதிய மகளிர் சுயஉதவிக்குழு கட்டிடம் கட்டித்தர வேண்டும்

Published On 2023-08-28 09:42 GMT   |   Update On 2023-08-28 09:42 GMT
  • கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் அப்பகுதி பெண்கள் சிரமப்படுகின்றனர்.
  • இடிந்துவிழும் நிலையில் மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம் உள்ளது.

திருவாரூர்:

முத்துப்பேட்டையை அடுத்த தோலி கிராமத்தில் கிராம வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிகுழுவினர் பயன்பாட்டுக்காக கட்டிடம் கட்டப்பட்டது.

இந்த கட்டிடம் மூலம் அப்பகுதி பெண்கள் பயன்அடைந்து வந்தனர்.

இந்த கட்டிடம் கடந்த 3 ஆண்டுகளாக பராமரிப்பின்றி செயல்படாமல் பூட்டியே கிடக்கிறது.

இதன் காரணமாக கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

எந்தநேரத்திலும் இடிந்துவிழும் நிலையில் காணப்படுகிறது.

இதனால் அந்த பகுதி மக்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர். கட்டிடம் பழுதடைந்து உள்ளதால் அப்பகுதி பெண்கள் சிரமப்படுகின்றனர்.

இந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என்று தோலி ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதுவரை கட்டிடம் இடிக்கப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடிந்துவிழும் நிலையில் உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடத்தை இடித்து விட்டு அதே இடத்தில் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News