ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு கட்டிடம்
- ரூ.19 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது.
- திறப்பு விழாவில் காலபைரவர் கோவில் பைரவ சுவாமிகள் பல்வேறு திருமுறை மந்திரங்கள் முழங்க, காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அருகே ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பப்ட பல்நோக்கு கட்டிடத்தை செல்லக்குமார் எம்.பி., திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் காலபைரவர் கோவில் அருகில், மக்களின் பல்வேறு பயன்பாட்டிற்காக பல்நோக்கு கட்டடம் ஒன்றைக் கட்டித்தர வேண்டும் என்று கிருஷ்ணகிரி எம்.பி., செல்லக்குமாரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து செங்கொடி நகர், கந்திகுப்பம் உள்பட சுற்று வட்டாரப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.19 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. இக்கட்டடத்தை எம்.பி. செல்லக்குமார் திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் காலபைரவர் கோவில் பைரவ சுவாமிகள் பல்வேறு திருமுறை மந்திரங்கள் முழங்க, காலபைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்டத் தலைவர் காசிலிங்கம், மாநில பேச்சாளர் நாஞ்சில் ஜேசு, மாவட்ட துணைத் தலைவர் சேகர், நகர தலைவர் யுவராஜ், இளைஞர் காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் விக்னேஷ்பாபு, சேவாதள காங்., கட்சி மாவட்டத் தலைவர் தேவராஜ், ஆடிட்டர் வடிவேல், பர்கூர் பேருராட்சி தலைவர் சந்தோஷ்குமார், பி.டி.ஓ., பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.