உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் டி.எஸ்.பி. தையல் நாயகி பேசிய காட்சி. அருகில் மல்லூர் பேரூராட்சி துணை தலைவர் வேங்கை எம்.அய்யனார், மல்லூர் பேரூராட்சி அதிகாரி சாந்தி உள்பட பலர் உள்ளனர்.  

போக்குவரத்து அதிகாரிகள் கூட்டம் அனைத்து பஸ்களும் மல்லூர் வழியாக செல்ல வேண்டும் போலீஸ் டி.எஸ்.பி. வேண்டுகோள்

Published On 2022-07-09 09:53 GMT   |   Update On 2022-07-09 09:53 GMT
  • இரவில் பெண்களை புற வழிசாலையில் இறக்கி விடுவதால் டாஸ்மாக் கடையை கடந்து 1.5 கி.மீ. தூரம் தனியே நடந்து ஊருக்குள் வர வேண்டும்.
  • இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளது. மேலும் நேரம் காப்பாளர் நியமிக்க வேண்டும்.

சேலம்:

மல்லூர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர், அரசு போக்குவரத்து அலுவலர் , தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் பங்கேற்ற கலந்துரையாடல் கூட்டம் நடந்தது . இந்த கூட்டத்தில் ஊரக டி.எஸ்.பி. தையல் நாயகி பேசியதாவது-

அனைத்து பஸ்களையும் மல்லூர் வழியாக இயக்க வேண்டும், இரவில் பெண்களை புற வழிசாலையில் இறக்கி விடுவதால் டாஸ்மாக் கடையை கடந்து 1.5 கி.மீ. தூரம் தனியே நடந்து ஊருக்குள் வர வேண்டும், இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் சூழல் உள்ளது. டிரைவர், கண்டக்டர்கள் பெண்களிடம் நெருங்கி பழகுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும், அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு காமிரா பெருத்த வேண்டும் என்றார்.

சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அதிகாரி சந்திரசேகர் பேசுகையில், மல்லூர் பஸ் டாப்பில் பஸ் பெயர், மல்லூர் வந்து செல்லும் நேரம் ஆகியவை அடங்கிய கால அட்டவனை வைக்க வேண்டும், நேர காப்பாளர் நியமிக்க வேண்டும், மல்லூர் ஊருக்குள் வரும் பஸ்களின் க ண்டக்டர்கள் அங்குள்ள நோட்டில் கையெழுத்திட வேண்டும் என்றார். அப்போது டவுன் பஞ்சாயத்து துணை தலைவர் வேங்கை எம். அய்யனார், அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர் கலை வாணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசி, மற்றும் தனியார் பஸ் உரிமை யாளர்கள் சங்கத்தினர் உள்பட ப லர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News