உள்ளூர் செய்திகள்

நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த தொழிலாளி

Published On 2023-03-30 14:55 IST   |   Update On 2023-03-30 14:55:00 IST
  • மணி கண்டன் (வயது 39). தொழி லாளியான இவர், நேற்று சேலம் கருங்கல்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
  • மோட்டார் சைக்கிள் நடு வழியில் நின்று விட்டது.

சேலம்:

சேலம் கொண்ட லாம்பட்டி திவ்யா தியேட்டர் பின்பகுதியில் வசித்து வருபவர் மணி கண்டன் (வயது 39). தொழிலாளியான இவர், நேற்று சேலம் கருங்கல்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் நடு வழியில் நின்று விட்டது. இதையடுத்து அதை மீண்டும் இயக்க பலமுறை முயற்சித்தும், மோட்டார் சைக்கிள் ஸ்டார்ட் ஆக வில்லை. இதனால் ஆத்திர மடைந்த மணிகண்டன், மோட்டார் சைக்கிளை நடு ரோட்டில் தீ வைத்து எரித்தார்.

இதனால் மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனை பார்த்த அந்த பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே அங்கு விரைந்து சென்ற செவ்வாய்ப்பேட்டை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். பொது இடத்தில் மோட்டார் சைக்கிளை எரித்ததற்காக மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News