உள்ளூர் செய்திகள்

யானை தாக்கி பலியான காளியப்பன்.

யானை தாக்கி கூலி தொழிலாளி சாவு

Published On 2023-04-22 10:05 GMT   |   Update On 2023-04-22 10:05 GMT
  • நேற்று கூலி வேலை செய்வதற்காக அருகில் உள்ள வட்டகானம்பட்டி காப்புகாடு வழியில் சென்று கொண்டிருந்தார்.
  • எதிரில் வந்த ஒற்றை யானை மிதித்து, காளியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மாரண்டஅள்ளி,

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் அ.மல்லாபுரம், வட்டக்கா னப்பட்டி பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் (வயது71).

இவர் நேற்று கூலி வேலை செய்வதற்காக அருகில் உள்ள வட்டகானம்பட்டி காப்புகாடு வழியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரில் வந்த ஒற்றை யானை மிதித்து, காளியப்பன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

வனப்பகுதிக்குள் போதிய உணவு மற்றும் குடிநீர் இல்லாததால், யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு, மக்கள் வசிக்கும் பகுதிக்கு அடிக்கடி வருவது வாடிக்கையாக உள்ளது.

இதனை தடுக்கும் பொருட்டு, கடந்த காலங்களில் கோடை கால ங்களில், வனப்பகுதிக்குள் யானைகளுக்கான உணவு வழங்கும் திட்டமும், ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி யானைகளுக்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆனால் சமீப காலங்களில் அத்தகைய நடைமுறைகளை தருமபுரி மாவட்ட வனத்துறையினர் கடைப்பிடிப்பது இல்லை.

இதன் காரணமாக யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு வருகிறது.

இதன் காரணமாக யானைகள் மின்சாரம் தாக்கி பலியாவதும், கிணற்றில் விழுந்து பலியாவதும், ெரயில் உள்ளிட்ட வாகனங்களில் மோதி பலியாவதும் உள்ளது.

அதேபோல யானை தாக்கி பொதுமக்களும், ஆடு, மாடு உள்ளிட்ட வீட்டு விலங்குகளும் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது.

எனவே வனப்பகுதியில் யானைகளுக்கான உணவு மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News