உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் சுற்றுலா பயணிகளை துரத்திய காட்டுயானைகள் கூட்டம்

Published On 2022-10-05 10:23 GMT   |   Update On 2022-10-05 10:23 GMT
  • அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.
  • சுற்றுலா பயணிகள் சிலர் இயற்கை அழகை ரசித்தவாறு புகைப்படங்களை எடுத்து கொண்டு இருந்தன

கோத்தகிரி,

ஆயுத பூஜை விடுமுறையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதியது.

நேற்றும் சுற்றுலாதல ங்களில் மக்கள் குவிந்து இயற்கை அழகினையும், சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்தனர். ஊட்டியில் அனைத்து பகுதிகளையும் பார்த்து விட்டு, சுற்றுலா பயணிகள் கோத்தகிரிக்கு காரில் வந்தனர்.முள்ளூர் பகுதியில் இருந்த தேயிலை தோட்டத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் இயற்கை அழகை ரசித்தவாறு புகைப்படங்களை எடுத்து கொண்டு இருந்தனர்.

அப்போது தேயிலை தோட்டத்தின் மறைவில் இருந்த 5 காட்டு யானைகள் திடீரென சுற்றுலா பயணிகளை நோக்கி ஓடி வந்தது. இதனை பார்த்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் யானை விடாமல் அவர்களை துரத்தி வந்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் காரில் ஏறி தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து சிறிது ேநரம் கழித்து காட்டு யானைகள் காட்டுக்குள் சென்று மறைந்தது.

கடந்த சில வாரங்களா கவே இதுபோன்ற நிகழ்வுகள் கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் நடந்து வருவ தால் சுற்றுலா பயணிகள் கவனத்துடனும் பாதுக்காப்பு டனும் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News