வடலூரில் 150 கிலோ இரும்பு காப்பர் திருடிய கும்பல்
- மழைநீர் சூழ்ந்த பகுதியில் பார்வதிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
- போலீசாரை கண்டதும் திருடர்கள் பயந்து தலைத்தெறித்து ஓடினர்.
கடலூர்:
வடலூர் அருகே பார்வதிபுரம் கிராமத்தில் உள்ள வயல்வெளிகளில் 2 நாட்களாக பெய்த கன மழையினால் ஓடைகள் மற்றும் வயல்களில் மழை நீரால் நெற்பயிர்கள் மூழ்கியது. பார்வதி புரம், மழைநீர் சூழ்ந்த பகுதியில் பார்வதிபுரம் கிராம நிர்வாக அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பார்வதிபுரம் வயல்களின் அருகே சுடுகாடு அருகில் என்.எல்.சியில் இருந்து எடுத்து வந்த காப்பர் கம்பியை திருடி வந்த திருடர்கள் கம்பியை தீயிட்டு, கொளுத்தி பிரித்தெடுத்து கொண்டி ருந்தனர். இதனை கண்ட கிராம நிர்வாக அலுவலர் பார்த்தசாரதி, வடலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணி எஸ்.ஐ சங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டதும் திருடர்கள் பயந்து தலைத்தெ றித்து ஓடினர். பின்னர் அங்கி ருந்த 80 ஆயிரம் மதிப்புள்ள 150 கிலோ இரும்பு காப்பர் கம்பியை போலீசார் பறி முதல் செய்தனர் இதை யடுத்து கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் பார்வதிபுரம் கிராமம் இந்திரா நகரை சேர்ந்த அந்தோணிராஜ், அந்தோணிராஜ் மகன் ஸ்டீபன் மற்றும் அடையாளம் தெரியாத பலர் மீது வழக்கு பதிந்து குற்றவாளிகளை வலை வீசி தேடி வருகின்ற னர். இச்சம்பவம் அப்பகுதி யில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.