உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

உத்தமபாளையத்தில் கோவிலில் புகுந்து உண்டியல் பணம் திருடிய கும்பல்

Published On 2023-09-24 10:27 IST   |   Update On 2023-09-24 10:27:00 IST
  • கோவிலில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.3000 திருடப்பட்டது.
  • புகாரின்பேரில் போலீசார் கும்பலை தேடி வருகின்றனர்.

உத்தமபாளையம்:

உத்தமபாளையத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(63). இவர் தெற்குரதவீதியில் உள்ள ஆறுமுகவிநாயகர் கோவிலில் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று பூஜை முடித்தபின்னர் கோவிலை பூட்டி சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு கேட் திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் கோவிலுக்குள் சென்று பார்த்தார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம் ரூ.3000 திருடப்பட்டது தெரியவந்தது.

இரவு நேரத்தில் கோவிலில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்து உத்தமபாளையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News