உள்ளூர் செய்திகள்

சாமுண்டீஸ்வரி.

முன்னாள் வலுதூக்கும் வீராங்கனை மரணம்- தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்களை குவித்தவர்

Published On 2023-10-09 04:05 GMT   |   Update On 2023-10-09 04:05 GMT
  • ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் 44 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்து உள்ளார்.
  • கோவை வடவள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

கோவை:

சென்னையை சேர்ந்தவர் சாமுண்டீஸ்வரி. இவர் தேசிய அளவிலான வலுதூக்கும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பல பதக்கங்களை வென்று உள்ளார்.

குறிப்பாக கடந்த 1991-ம் ஆண்டு சர்வதேச மகளிர் வலுதூக்கும் போட்டியில் 3-வது இடமும், 1992, 1994-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிய பவர் லிப்டிங் போட்டியில் 44 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கங்களும் வென்று சாதனை படைத்து உள்ளார். தொடர்ந்து 1995-ம் ஆண்டு நடந்த ஆசிய பவர்லிப்டிங் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்திருந்தார்.

சாமுண்டீஸ்வரியின் கணவர் அசோக் கோவையில் பணியாற்றியதால் அவர்கள் குடும்பத்துடன் இங்கேயே தங்கியிருந்தனர். இந்நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை வடவள்ளியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 53.

சாமுண்டீஸ்வரியின் உடல், அவரது சொந்த ஊரான சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது. சாமுண்டீஸ்வரிக்கு ஹரிகிருஷ்ணன், மகேஸ்வர் என்ற 2 மகன்களும், காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.

Tags:    

Similar News