உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் சங்கு குளிக்க சென்ற போது கடலில் மூழ்கி மீனவர் பலி
- நேற்று ஜெயராஜ் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்களுடன் சங்கு குளிக்க சென்றார்.
- அவர்கள் புதிய துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் சங்கு குளித்த போது திடீரென ஜெயராஜ் கடலில் மூழ்கினார்.
தூத்துக்குடி :
தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுக்குடி அருகே உள்ள சாமுவேல் புரத்தை சேர்ந்தவர் ஜெயராஜ் (வயது45). சங்குகுழி மீனவர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று ஜெயராஜ் அதே பகுதியை சேர்ந்த 5 மீனவர்களுடன் சங்கு குளிக்க சென்றனர். அவர்கள் புதிய துறைமுகம் ஆழ்கடல் பகுதியில் சங்கு குளித்த போது திடீரென ஜெயராஜ் கடலில் மூழ்கினார். அவரை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்த னர்.
பின்னர் அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று நள்ளிரவு அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக தருவை குளம் கடலோர காவல் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.