உள்ளூர் செய்திகள்

மீஞ்சூரில் மரக்கடையில் தீ விபத்து

Published On 2023-10-16 15:51 IST   |   Update On 2023-10-16 15:51:00 IST
  • சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி பற்றி எரிய தொடங்கியது.
  • தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

பொன்னேரி:

திருவொற்றியூரை சேர்ந்தவர் ஹரீஸ். இவர் மீஞ்சூர் பஜாரில் மரக்கடை வைத்து உள்ளார். நேற்று மாலை ஊழியர்கள் மரக்கடையில் வேலைபார்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மரக்கடையில் தீவிபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி பற்றி எரிய தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடையில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே வந்தனர்.

தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் அங்கிருந்த மரப்பொருட்கள் எரிந்து நாசமானது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை. மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

Tags:    

Similar News