உள்ளூர் செய்திகள்

10 வருடங்களுக்கு மேலாக மருத்துவம் பார்த்த போலி டாக்டர்

Published On 2023-02-24 09:43 GMT   |   Update On 2023-02-24 09:43 GMT
  • காவல்துறை அதிகாரிகள் துணையுடன் நாயக்கன் கொட்டாய் பகுதியில் சோதனை நடத்தினர்.
  • கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த ஊசிகள், மருந்து, மாத்திரைகளை கைப்பற்றி னர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.

அதன் அடிப்படையில் போலி மருத்துவ ஒழிப்பு குழுவினருடன் கிருஷ்ணா புரம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து காவல்துறை அதிகாரிகள் துணையுடன் நாயக்கன் கொட்டாய் பகுதியில் சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் உள்ள மருத்துவமனை நடத்தி வந்த கண்ணன் (வயது 60) என்பவரிடம் உரிமை மற்றும் ஆவணங்கள் சோதனை மேற்கொண்டனர். அவர் பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் மருத்துவம் பார்த்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது.மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது தந்தை ஹோமியோ மருத்துவம் பார்த்து வந்த பொழுது அதனை உடனிருந்து கற்று க்கொண்டு தனது தந்தை இறந்த பின்னர் கடந்த பத்தாண்டுகளாக நோயாளிகளுக்கு ஊசி போட்டும், மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

பின்னர் கிருஷ்ணாபுரம் போலீசார் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த ஊசிகள், மருந்து, மாத்திரைகளை கைப்பற்றி னர்.

Tags:    

Similar News